தன்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து சிலர் மோசடி வேலைகளில் ஈடுபடுவதாகவும், தனது ரசிகர்கள் இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் நடிகர் ராஜ்கிரண் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரு நடிகன் என்பதால் தன்னை வைத்து திரைப்படம் தயாரிக்க சிலரும் தனது அபிமானிகள், தீவிர ரசிகர்கள் எனப் பலரும் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது சாதாரணமாக நடப்பதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
“ஆனால் இம்மாதிரியான புகைப்படங்களை வைத்துக்கொண்டு, சிலர் என் உறவினர்கள் என்றோ, மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்றோ கூறிக்கொண்டு உங்களை அணுகினால், மிகக் கவனமாக இருங்கள்.
“என்னிடம் யார் சிபாரிசும் இடம்பெறாது. எனது விவகாரங்களில் நான் மட்டுமே முடிவெடுக்கிறேன். யாரும் ஏமாந்துவிடக்கூடாது என எச்சரிக்கவே இந்தப் பதிவு,” என ராஜ்கிரண் மேலும் தெரிவித்துள்ளார்.