ரகுல் பிரீத் சிங்:மகிழ்ச்சியாக இருப்பதே சிறந்த மருந்து

1 mins read
ff5c5057-b126-4eaa-9da1-c46dded6a81f
ரகுல் பிரீத் சிங் - படம்: ஊடகம்

எப்போதும் மகிழ்ச்சியாகச் சிரித்துக்கொண்டு இருந்தால் அதுவே வாழ்க்கைக்குச் சிறந்த மருந்து என்கிறார் ரகுல் பிரீத் சிங்.

நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துப் பிரபலமானவர். கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானியை திருமணம் செய்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டகிராமில் அவரின் அண்மைய புகைப்படங்களைப் பகிர்ந்து வருவதோடு அவ்வப்போது சில பதிவுகளைப் போடுகிறார்.

தற்போது தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில், “சிறந்த, கவனமான தெரிவுகள் மூலமாக உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள். இயற்கையுடன் இணைந்திருந்தால் உங்களுக்கு அற்புதமான உணர்வு கிடைக்கும். பிடித்த விளையாட்டை விளையாடுங்கள். உங்களை அமைதிப்படுத்த தியானம் மேற்கொள்ளுங்கள். எப்போதும் மகிழ்ச்சியாக, சிரித்துக்கொண்டு இருங்கள். காரணம், மகிழ்ச்சியே நலமான வாழ்க்கைக்குச் சிறந்த மருந்து,” என்றுரகுல் பதிவிட்டு இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை