தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாயகன் ஆனார் ராமர்

1 mins read
7fef15a4-b88e-4a83-b969-5d68e9079b12
‘அது வாங்குனா இது இலவசம்’ படத்தில் நாயகனாக நடிக்கும் ராமர். - படம்: ஊடகம்

மதுரையைச் சேர்ந்த ராமர் என்பவர் சின்னத்திரைக்கு வந்தவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் புகழ்பெற்றவர்.

இந்நிலையில் ராமர் ‘அது வாங்குனா இது இலவசம்’ என்ற படத்தின் மூலம் நாயகன் ஆகியிருக்கிறார். கதாநாயகியாக கன்னட நடிகை பூஜாஸ்ரீ நடித்துள்ளார். மேலும் கலையரசன், சூப்பர் குட் சுப்பிரமணி, மாரிஸ் ராஜா, சம்பத், மீசை ரமேஷ், அருண், அம்மையப்பன் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்வின் ராஜ் இசை அமைத்துள்ளார், விக்னேஷ் மலைச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் செந்தில்ராஜன் கூறும்போது, “ஒரு சிலர் செய்யும் தவறுகளால் மற்றவர்கள் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் என்ன விஷயங்கள் நடக்கின்றன என்பதை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி உள்ளது. இதுவரை பார்க்காத ஒரு ராமரை இந்தப் படத்தில் பார்க்கலாம். இந்தப் படத்திற்குப் பிறகு நிச்சயம் வடிவேலு போல மிகப்பெரிய அளவில் அவர் பேசப்படுவர்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்