ராமராஜன் நடித்த ‘சாமான்யன்’ படம் எதிர்பார்த்த வசூலைத் தரவில்லை.
திரையரங்குகளில் குறைந்த நாள்களே ஓடியதால் இப்படம் குறித்து யாரும் பெரிதாகப் பேசவில்லை.
சூட்டோடு சூடாக ராமராஜன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனாலும், இதுவரை படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
இப்போதெல்லாம் தமது சொந்த ஊரான மேலூரில்தான் பெரும்பாலும் தங்குகிறாராம் ராமராஜன். முக்கியமான பணிகள் இருந்தாலோ, பிள்ளைகளைப் பார்க்க விரும்பினாலோ மட்டுமே சென்னை வருகிறார்.
இதற்கிடையே, கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி ஒரு கதையை உருவாக்கி உள்ளாராம். அநேகமாக, புது தயாரிப்பாளர் உதவியோடு இந்தக் கதையைப் படமாக்க அவர் ஏற்பாடு செய்து வருவதாகத் தகவல்.
அப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.