இந்துக்களின் இதிகாசங்களில் மிக முக்கியமானவை இராமாயணமும் மகாபாரதமும். இராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வருகிறது ‘ராமாயணா’ படம். ரூ.850 கோடி செலவில் மூன்று பாகங்களாகப் படம் உருவாக உள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
‘கில் தில்’, ‘சிச்சோரி’, ‘பூத்நாத்’ , ‘தங்கல்’ உள்ளிட்ட இந்திப் படங்களை இயக்கிய நிதீஷ் திவாரி ‘ராமாயணா’ படத்தை இயக்க உள்ளார்.
தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் யாஷ், இப்படத்தில் ராவணனாகவும் நடிக்கிறார்.
ராமராக ரன்பீர் கபூர், சீதாதேவியாக சாய் பல்லவி, ஹனுமானாக சன்னி தியோல், லட்சுமணராக ரவி துபே, கைகேயியாக லாரா தத்தா, மண்டோதரியாக காஜல் அகர்வால், ஜடாயுவாக அமிதாப் பச்சன், மேக்நாதனாக விக்ராந்த் மஸ்ஸி, தசரதராக பழைய ராமாயணத் தொலைக்காட்சி தொடரில் ராமராக நடித்த அருண் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.
இவர்களைத்தவிர கும்பகர்ணனாக பாபி தியோல், ரம்யா கிருஷ்ணன், அனில் கபூர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மான், ஹாலிவுட் புகழ் ஹான்ஸ் ஸிம்மர் ஆகிய இவ்விரண்டு உலகத் தர இசைக்கலைஞர்களும் படத்திற்கு இசையமைக்க உள்ளனர்.
உலகத்தரம் வாய்ந்த மோசன் கேப்சர், 3டி ஃபேசியல் டிரேக்கிங், வாலுமெட்ரிக் லைட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இப்படத்தில் பயன்படுத்தப்பட உள்ளன.ு.