உலகெங்கும் 50,000 திரையரங்குகளில் வெளியாகும் ‘ராமாயணா’

உலகெங்கும் 50,000 திரையரங்குகளில் வெளியாகும் ‘ராமாயணா’

1 mins read
72b62439-c6bf-4762-a406-bf6ca625cf13
‘ராமாயணா’ படத்தில் ஒரு காட்சி. - படம்: எகனாமிக் டைம்ஸ்
Google News Preferred Icon

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் காவியப் படம் ‘ராமாயணா’.

நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் பிரம்மாண்டமான படமாக உருவாகிறது.

இந்திய வம்சாவளியினரை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், அனைத்துலகத் திரை ரசிகர்களையும் கவரும் வகையில் நவீனத் தொழில்நுட்பத்துடன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இத்திரைப்படம் அனைத்துலக அளவில் கிட்டத்தட்ட 50,000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் உலகளாவிய விநியோக உரிமையை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே இவ்வளவு பிரம்மாண்டமான அளவில் அனைத்துலக அளவில் திட்டமிடப்பட்ட முதல் வெளியீடு இதுவாகும் என்கிறார்கள் படக்குழுவினர்.

இரண்டு பாகங்களாக எடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இக்காவியத்தின் முதல் பாகம் 2026 தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதியும் இரண்டாம் பாகம் 2027 தீபாவளிப் பண்டிகையன்றும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

திரையரங்க

வெளியீட்டிற்கு முன்பே இத்தகைய மாபெரும் சாதனையைப் படைத்திருப்பது இந்தியத் திரையுலகையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்