கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார் நடிகை ரம்பா.
தனக்காக ஒரு மேலாளரையும் நியமித்து வாய்ப்பும் தேடத் தொடங்கியுள்ளார்.
“எப்போதுமே சினிமா மீதுதான் எனது முதல் காதல். மீண்டும் ஒரு நடிகையாக எனக்கு சவால்விடக்கூடிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க விரும்புகிறேன். அதற்கு இதுதான் சரியான நேரம்.
“புதிய பரிமாணங்களை ஆராய்ந்து பார்வையாளர்களுடன் அர்த்தமுள்ள விதத்தில் என்னை இணைக்க அனுமதிக்கும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன்,” என்கிறார் ரம்பா.
தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், கடந்த 2010ஆம் ஆண்டு, இந்திரகுமார் பத்மநாபன் என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்ட பின்னர் திரையுலகை விட்டுவிலகினார்.

