ஒரே ஒரு மொட்டை மாடி படப்பிடிப்பு மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் யோகா மாஸ்டரை காதலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், தனது காதலரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் வகையில், அவரைக் கட்டிப்பிடித்தபடி இருக்கும் காணொளியை இன்ஸ்டகிராமில் பகிர்ந்து உள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சிலர் இணையத்தில் எதையாவது பேசி அதை சர்ச்சையாக்கி அதன் மூலம் பிரபலமாவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்.
இப்படி சில நடிகைகள் இருந்தாலும் அவர்களுக்கு எதிர்பார்த்த படவாய்ப்பு வருவதில்லை. இப்படி எந்தவிதமான சர்ச்சையும் வேண்டாப்பா சாமி, நடிக்க பட வாய்ப்பு வந்தா வருது. இல்லையென்றால், இருக்கவே இருக்கிறது இன்ஸ்டகிராம் என்று சினிமாவை ஒப்புக்கு வைத்துக்கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வரும் நடிகைகளில் முக்கியமானவராக இருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன்.
அப்படி புகைப்படங்கள் மூலம் பிரபலமானவர்தான் நடிகை ரம்யா பாண்டியன். ஆனால், இவர் மற்ற நடிகைகளைப்போல படப்பிடிப்பிற்காக பணத்தைச் செலவு செய்யாமல், மொட்டை மாடியில், வளைந்து நெளிந்து இருக்கும் தனது இடையழகை காட்டி போட்டோ எடுத்து ஒரே புகைப்படத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார்.
தனது ரசிகர்களுக்காகவே விதமான படங்களைப் பகிர்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
பிரபலமான கையோடு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு பெயரை பெற்றுத்தராததால், புகைப்படங்கள் எடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியானது. கடந்த சில ஆண்டுகளாக ரம்யா பாண்டியன் யோகா மாஸ்டரைக் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இவர்களின் திருமணம் ரிஷிகேஷில் அடுத்த மாதம் 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தன்னுடைய காதலனுடன் இருக்கும் காணொளியை வெளியிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அந்த காணொளியைப் பார்த்த ரசிகர்கள் அட நம்ப ரம்யாபாண்டியன் செல்லத்திற்கு கல்யாணமா? என கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

