இந்தித் திரையுலகின் நட்சத்திர தம்பதியர் ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் உற்சாகத்தின் உச்சியில் உள்ளனர்.
வேறொன்றுமில்லை... ரன்பீர் கபூர் விரைவில் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். அடுத்து வரக்கூடிய ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் ரன்பீர். இதற்கான பேச்சுவார்த்தை ஏறக்குறைய முடிந்துவிட்டதாகத் தகவல்.
படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் ரன்பீருக்கு முக்கியமான கதாபாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே கபூரின் மனைவி ஆலியா பட்டும் 2023ல் ஹாலிவுட்டில் அறிமுகமாகிவிட்டார். அதனால், ‘ஹாலிவுட் குடும்பம்’ என வட இந்திய ஊடகங்கள் குறிப்பிடத் தொடங்கி உள்ளன.