வேகமாக வளரும் ‘சேயோன்’

வேகமாக வளரும் ‘சேயோன்’

1 mins read
78fe653a-0855-4b54-9940-f794ca3344d4
‘சேயோன்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: தமிழ் ஏசியாநெட்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படப்பிடிப்பு முழு வேகத்தில் நடக்கிறது.

முழுப் படத்தையும் மூன்றே மாதங்களில் முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வேலைகள் நடந்துவருகின்றன.

“இவ்வளவு விரைவாக சிவகார்த்திகேயன் தயாரிக்க என்ன காரணம்?,” என்று கேட்டால் தயாரிப்புத் தரப்பின் பதில் அசர வைக்கிறது.

“சிவகார்த்திகேயன் நடிக்கும், தனியே தயாரிக்கும் படங்கள் தொடர்ந்து நல்ல வசூலைக் கண்டு வருகின்றன. எனவேதான் அவர் முன்பே நடிக்க ஒப்புக்கொண்ட படங்களை விரைவாக வெளியிடுவது நல்லது என நினைக்கிறார். மேலும், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்த பிறகு சிவா நடிக்கும் படத்தையும் அவரே தயாரிக்கத் திட்டமுள்ளது,” என்கிறார்கள் விவரப் புள்ளிகள்.

குறிப்புச் சொற்கள்