தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வி குறித்து மீண்டும் மனம் திறந்துள்ளார் ராஷி கண்ணா.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ என்ற இந்திப்படம் நவம்பர் 15ஆம் தேதி வெளியானது. இப்படத்துக்கான விளம்பர நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ராஷி கண்ணா, தாம் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர் என்றார்.
“என் வாழ்விலும் காதல் வந்தது. ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக அது தோல்வியில் முடிந்தது. இதனால் வேதனையில் மூழ்கி கடும் மன அழுத்தத்துக்கு ஆளானேன். பின்னர் குடும்பத்தாரும் நண்பர்களும் என்னை மீட்கப் போராடினர். நானும் என் மனதை தேற்றிக் கொண்டு மனதளவில் வலுவானேன்.
“நான் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர சினிமா பயணமும் கை கொடுத்தது என்று ராஷி கண்ணா மேலும் தெரிவித்தார்.