தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் ஹைதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்களுக்கு வரும் பிப்ரவரி 2026ஆம் ஆண்டு திருமணம் நடக்கவிருப்பதாகத் தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்ததிலிருந்து இவர்களுக்கு இடையேயான நட்பு காதலாக மாறியது. பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தாலும் இருவரும் வெளிப்படையாகத் தங்கள் காதலை அறிவிக்கவில்லை.
நிச்சயதார்த்தம் அல்லது திருமணம் குறித்து இந்த நட்சத்திர ஜோடி இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இருப்பினும், இருவரும் நிச்சயம் செய்துகொண்டார்கள் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.