தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராஷ்மிகா மந்தனாவுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து

1 mins read
094848dd-f3d4-49ce-9907-3989617c290d
ராஷ்மிகா மந்தனா. - படம்: ஏஎஃப்பி

2016ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக்’ பார்ட்டி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ரா‌‌ஷ்மிகா மந்தனாவுக்கு தெலுங்கில் ‘பு‌‌ஷ்பா’ படம் திருப்புமுனையை ஏற்படுத்தியதுடன் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.

தமிழில் கார்த்தி ஜோடியாக ‘சுல்தான்’, விஜய்யுடன் ‘வாரிசு’ படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தனுசுடன் ‘குபேரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தியில் நடித்த ‘அனிமல்’, ‘சாவா’ படங்களும் பெயர் வாங்கிக் கொடுத்துள்ளன.

ராஷ்மிகா ஒரு படத்துக்கு ரூ.8 கோடி சம்பளம் கேட்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராஷ்மிகா வைத்துள்ள சொத்துகளின் விவரம் பற்றிய தகவல் இணையத்தளத்தில் பரவி வருகிறது. அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.100 கோடியை எட்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராஷ்மிகா மந்தனா சினிமாவை தாண்டி விளம்பரப் படங்களில் நடித்தும், பல வர்த்தக நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக இருந்தும் சம்பாதிக்கிறார்.

பெங்களூருவில் அவருக்கு ரூ.8 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா வீடு உள்ளது. விலை உயர்ந்த சொகுசு கார்களையும் ராஷ்மிகா வைத்துள்ளார்.

மும்பை, கோவா, கூர்க், ஹைதராபாத் பகுதிகளிலும் அவருக்கு நிறைய சொத்துகள் உள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்