‘மைசா' படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதால் நீண்ட ஓய்விலிருந்த ராஷ்மிகா மந்தனா, மீண்டும் தற்போது மெல்ல தனது உடற்பயிற்சிக்குத் திரும்பியுள்ளார்.
அண்மையில் அவர் தம் கணவர் விஜய் தேவரகொண்டா, அவரின் வீட்டாருடன் ஜப்பானுக்குச் சென்று மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட்டு நாடு திரும்பினார். ‘ரணபாலி’ படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு குடும்பத்தினர் அனைவரும் இந்த சுற்றுலாவிற்குச் சென்றிருந்தனர்.
நவம்பர் 27ஆம் தேதி வெளியாகவிருந்த ‘மைசா’ திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் இன்னும் அறிவிக்கவில்லை.
இதற்கிடையே, உடல் காயத்திலிருந்து மீண்டுள்ள ராஷ்மிகா, மீண்டும் தனது வழக்கமான உடற்பயிற்சிகளைத் தொடங்கியுள்ளார். தனது இல்லத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை அவரது குழுவினர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
புகைப்படங்களுடன், “வேலை முடிந்து நீங்கள் அவரது வீட்டிற்குச் சென்றால், அவர் இதைத்தான் செய்துகொண்டிருப்பார்,” எனப் படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
அடுத்து, அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘ராக்கா’ படத்திலும் ராஷ்மிகா நடிக்கவிருக்கிறார்.
