தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.
அண்மையில் ராஷ்மிகா மந்தனா தனது ‘இன்ஸ்டகிராம்’ பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
‘அன்புள்ள டைரி’ என்ற தலைப்பில் அவரது வாழ்க்கையைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தைப் பதிவிட்டார்.
ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களை பதிவிட்டு இவை எல்லாம் இல்லாமல் என் வாழ்க்கையில் எதும் செய்ய இயலாது என குறிப்பிட்டுள்ளார். நல்ல உணவு, சிரிப்பு, தூக்கம், புத்தகம் வாசித்தல், பயணம், காபி, நாய் குட்டி ஆரா, வேலை உள்ளிட்ட சில குறிப்பிட்ட விசயங்களை செய்வது போல் உள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவைகள் தான் அவருக்கு தொடர்ந்து மகிழ்ச்சியை தருபவை என பதிவிட்டுள்ளார்.
இவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.