முதன்முறையாக ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
‘எஸ்கே 23’ எனக் குறிப்பிடப்படும் இப்படத்தில் நகைச்சுவையும் அதிரடிக்காட்சிகளும் சரிவிகிதத்தில் இடம்பெற்றிருக்குமாம்.
கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. பிறகு திடீரென நிலைமை மாறி, ராஷ்மிகா படக்குழுவுடன் இணைந்துள்ளார்.
‘எஸ்கே 24’ படத்தை சிபிசக்கரவர்த்தி இயக்குவார் என்றும் குறுகிய காலத்தில் இப்படம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
‘டான்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிபியுடன் இணைந்துள்ளார் அனிருத்.
இந்தப் படத்தை முடித்த கையோடு சுதா கொங்கரா படத்துக்கு கால்ஷீட் அளித்துள்ளாராம் சிவா.

