அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் ராஷ்மிகா

அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் ராஷ்மிகா

1 mins read
bdeb8971-7e5d-493f-a5c6-339eae068be2
அட்லீ, அல்லு அர்ஜுனுடன் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரா‌‌ஷ்மிகா. - படம்: தினத்தந்தி

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தெலுங்கு நட்சத்திரம் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய அறிவியல் புனைவுத் திரைப்படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமான பொருள் செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில், முன்னணி நடிகை தீபிகா படுகோன் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தில் அல்லு அர்ஜுன் நான்கு வெவ்வேறு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்படத்தில் ஜான்வி கபூர், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

‘புஷ்பா’ திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இதில் அவருக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாம். குறிப்பாக, ராஷ்மிகா பங்கேற்கும் அதிரடியான சண்டைக் காட்சிகள் படத்தில் இடம்பெறவுள்ளன. தற்போது இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படப்பிடிப்பு ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, மறுபுறம் ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் தேவரகொண்டா குறித்த தனிப்பட்ட செய்திகளும் இணையத்தில் உலா வருகின்றன. இவர்கள் இருவரும் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போவதாகச் செய்திகள் பரவி வருகின்றன. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்