தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் படம் இயக்கும் ரத்னகுமார்

1 mins read
4380fd30-7ef9-4fb3-a623-22126b55c643
ரத்னகுமார். - படம்: ஊடகம்

‘மேயாத மான்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். அதன் பிறகு அவர் இயக்கிய ‘ஆடை’, ‘குலுகுலு’ ஆகிய படங்கள் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

இதையடுத்து ‘மாஸ்டர்’, ‘லியோ’, ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களுக்கு கூடுதல் திரைக்கதை எழுதினார். கடைசியாக ‘சர்தார்-2’, ‘கராத்தே பாபு’ ஆகிய படங்களுக்கும் கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார் ரத்னகுமார்.

பிறகு அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

இந்நிலையில், தன் கையில் மைக் பிடித்தபடி காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்றை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’, லோகேஷ் கனகராஜின் ‘ஜீஸ்குவாட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் ரத்னகுமார்.

‘ரெட்ரோ’ படத்தில் வில்லனாக நடித்த வினுதான் கதாநாயகன். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்