இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல், ‘ரத்னமாலா’ தற்போது வெளியாகி இளையர்களைக் கவர்ந்துள்ளது.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், அவரது குரலில் உருவாகியுள்ள இந்தப் பாடல், காதலை அழகாக வெளிப்படுத்துகிரது. ஏற்கெனவே வெளியான ‘அடி அலையே’ பாடல் வெற்றி பெற்ற நிலையில், ‘ரத்னமாலா’ பாடலில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலாவின் காதல் காட்சிகள் ரசிகர்களிடையே பெருவரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, சிவகார்த்திகேயன் மிகவும் அழகாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 14 அன்று ‘பராசக்தி’ திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் கதைக்களம் ஒரு போராளியின் கதையாக இருந்தாலும் அதனுள் ஆழமான காதல் கதையைச் சுதா கொங்கரா அழகாகக் கையாண்டுள்ளார் என்பது பாடல்கள் மூலம் தெளிவாகிறது. விரைவில் விஜய் நடிக்கும் படத்துடன் ‘பராசக்தி’ பொங்கல் பந்தயத்தில் மோதுவதால், கோலிவுட்டில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

