நடிகர் ரவி மோகனும் அரசியல் படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள அந்தப் புதிய படம் ‘கராத்தே பாபு’.
இப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சித்தொகுப்பு ஜனவரி 29ஆம் தேதி வெளியானது.
அதில், தமிழக சட்டப்பேரவையில் விவாதம் நடப்பது போன்ற சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரவி மோகன் வேட்டி, சட்டையுடன் அரசியல்வாதிக்குரிய தோற்றத்துடன் காணப்படுகிறார்.
ஏற்கெனவே விஜய் நடிப்பில் உருவாகும் ‘ஜன நாயகன்’ படமும் அரசியல் கதைக்களத்துடன்தான் உருவாகிறது.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக மேலும் சில அரசியல் படங்களை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.

