தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் பரபரப்பைக் கிளப்பிய ரவி மோகன்

1 mins read
8af02451-75f5-410f-a30e-5f55d3da76e0
குன்றக்குடி கோயிலில் ஜோடியாக மாலையோடு காட்சியளித்த ரவி மோகன். - படம்: ஊடகம்

குன்றக்குடி கோவிலில் தன் தோழி கெனிஷாவுடன் சாமி தரிசனத்திற்குச் சென்ற ரவி மோகனின் படங்கள் வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார் ஜெயம் ரவி.

தனிப்பட்ட வாழ்க்கையை கடந்து சினிமாவில் ரவி அடுத்தடுத்து புதிய பாதையில் பயணிக்க உள்ளார்.

விரைவில் இயக்குநராக களமிறங்க உள்ள அவர், தனது முதல் படத்தில் யோகி பாபுவை வைத்து இயக்க இருக்கிறார்.

இந்நிலையில் அடுத்து தயாரிப்பாளராகி உள்ளார்.

தனது பெயரிலேயே ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி உள்ளார்.

இந்த நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க உள்ளார்.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ரவி மோகனும் கெனிஷாவும் குன்றக்குடி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது தங்களது கழுத்தில் மாலையுடன் ரவி மோகனும், கெனிஷாவும் கோவில் பூசாரிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இந்திய ஊடகங்களில் பரவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாகோவில்