படங்களின் தொடர் தோல்வி, குடும்ப வாழ்வில் சலசலப்பு ஆகியவற்றை கடந்துவந்து மீண்டும் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் ரவி மோகன்.
தனது பிறந்த நாளன்று ‘ஜெயம்’ ரவி என்று அழைக்க வேண்டாம், இனி ரவி மோகன் என அழைக்கவும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தற்போது ‘பராசக்தி’, ‘கராத்தே பாபு’ ஆகிய படங்களில் கவனம் செலுத்திவரும் ரவி மோகன், தான் நடித்துவரும் படங்களின் பணிகளை முடித்துவிட்டு, இயக்குநராக அறிமுகமாகவும் முடிவு செய்திருக்கிறார்.
இதற்காக படப்பிடிப்புக்கு இடையே திரைக்கதை அமைக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அப்படத்தை அவரே தயாரித்து, இயக்கவும் முடிவு செய்துள்ளார்.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ள அக்கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்கவுள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

