ரவி மோகனின் கராத்தே பாபு ஆகஸ்ட் 28ல் வெளியீடு

ரவி மோகனின் கராத்தே பாபு ஆகஸ்ட் 28ல் வெளியீடு

படம்: ரவி மோகன்

27 Jun 2026 - 2:45 pm

1 mins read

நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்..

டாடா திரைப்பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘கராத்தே பாபு’.

அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை ‘ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது. சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தில், நடிகர் ரவி மோகன் முதன்முறையாக அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் நாசர், கே.எஸ். ரவிக்குமார், காளி வெங்கட், பிரதீப் ஆண்டனி, டாவ்டி எஸ். ஜிவால், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், கராத்தே பாபு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைச் சுவரொட்டியாகத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுளது. இதன்படி வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

இப்படம் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்து, பாடல்களை கேட்ட அவரது ரசிகர்கள், ரவிமோகனுக்கு இதுவொரு மீண்டு வரும் படமாக அமையும் என்று கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்