தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரவி மோகனின் புதிய அவதாரம்

1 mins read
a9cad6b1-2d36-42c1-92b1-3acc2792adc8
ரவி மோகன். - படம்: ஊடகம்

ஜெயம் ரவி என்கிற ரவி மோகன் பல படங்களில் வரிசையாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்து யோகி பாபுவை நாயகனாக வைத்து ஒரு படத்தை தாமே இயக்கத் திட்டமிட்டுள்ளார் என்பதும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்பதும் ஏற்கெனவே தெரிந்த தகவல்தான்.

ரவி மோகனின் மூன்றாவது அவதாரம் தயாரிப்பாளர். சொந்தப் படம் தயாரிக்க ஏதுவாக கடந்த வாரம் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளார்.

இதற்கு முன்பு தனது மாமியார் தயாரிப்பில் சில படங்களில் நடித்தார். அப்போது பண விவகாரங்கள் தொடர்பாக உருவான சிக்கல்கள், நெருக்கடிகள்தான் அவர் தன் மனைவி ஆர்த்தியைப் பிரியக் காரணம் எனக் கூறப்பட்டது. இதை ஆர்த்தியின் தாயார் அறவே மறுத்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்