தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மறுவெளியீடு காணும் ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம்

1 mins read
1b724ec4-49dd-4857-b64e-93da23ad508d
‘கரகாட்டக்காரன்’ படத்தில் ராமராஜன், கனகா. - படம்: ஊடகம்

அண்மைக் காலமாக அஜித், விஜய் என முன்னணி நாயகர்கள் முன்பு நடித்த படங்கள் மறுவெளியீடானது.

அதற்கு முன்னதாக சில ஆண்டுகள் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் இவ்வாறு வெளியாகின. இந்நிலையில் ‘கரகாட்டக்காரன்’ படமும் விரைவில் மறுவெளியீடு காண்கிறது.

கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா ஆகியோர் நடித்து 1989ல் வெளியான இப்படத்தில் கோவை சரளா, சண்முக சுந்தரம், காந்திமதி, கவுண்டமணி, செந்தில் எனப் பலர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றிருந்தனர்.

இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் அமோக வரவேற்பைப் பெற்றன.

மொத்தம் ரூ.35 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட ‘கரகாட்டக்காரன்’ ரூ.5 கோடி வசூல் கண்டது. 450 நாள்கள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

குறிப்புச் சொற்கள்