நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில் தயாராகும் இத்திரைப்படத்தில் ஊர்வசி, சினேகா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் துனியா விஜய், சிங்கம்புலி, அபிநயா, இனியா ஆகியோரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2020ஆம் ஆண்டில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
முதல் பாகத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கியிருந்த நிலையில், இதன் இரண்டாம் பாகத்தைச் சுந்தர் சி இயக்கியுள்ளார்.
அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்த ரெஜினா கசாண்ட்ரா, இத்திரைப்படத்திலும் வில்லியாகக் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ராவிற்கு இதுவரை கொடுக்கப்படாத ஒரு புதிய தோற்றத்தை இயக்குநர் சுந்தர் சி அமைத்துக் கொடுத்துள்ளார்.
மேலும், ரெஜினாவிற்காகத் தனித்துவமான, வலிமையான கதாபாத்திரத்தை இயக்குநர் சுந்தர் சி உருவாக்கியுள்ளதாக கோலிவுட் திரையுலக வட்டாரத் ததகவல்கள் கூறுகின்றன.
இதனைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே 23’ திரைப்படத்திலும் ரெஜினா ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


