நடிகர்கள் பார்த்திபனும் வடிவேலுவும் அண்மையில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
வடிவேலுவைச் சந்தித்தது குறித்து பார்த்திபன் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பார்த்திபன், “நகைச்சுவையில் மட்டுமல்ல நடிப்பிலும் ஈடில்லாதவர் வடிவேலு. இருவரும் சந்தித்தோம். விரைவில் படம் வெளியாகும்,” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளது உறுதியாகி இருக்கிறது.
பார்த்திபன் - வடிவேலு கூட்டணி நகைச்சுவைக் காட்சிகள் மிகவும் பிரபலம். இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
அதனால் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இருவரும் நடிக்க இருப்பதால், இந்தக் கூட்டணிக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.
‘கேங்கர்ஸ்’ படத்துக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் ‘மாரீசன்’ படம் வெளியாக இருக்கிறது.
அதில் ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு ஃபகத் பாசிலுடன் இணைந்து நடித்துள்ளார் வடிவேலு. அந்தப் படம் ஜூலையில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

