தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிறிஸ்துமஸை குறி வைக்கும் விடுதலை 2 படக்குழு

1 mins read
a3fe07f7-079d-4ff7-9a28-09a652c34608
விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர். - படம்: ஊடகம்

வெற்றிமாறனின் விடுதலை 2 படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருக்கிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி இணைந்து நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த திரைப்படம் ‘விடுதலை பாகம் 1’. இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, சூரி மற்றும் மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஏற்கெனவே இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாயின.

தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் துவங்குகிறது எனக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தை கிறிஸ்துமஸ் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது படக்குழு.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரையரங்கு