அஜித் படங்களின் வெளியீட்டு தேதிகள் மாற்றம்

1 mins read
ba171146-1602-43dd-8535-6807a4a75073
படம்: - ஊடகம்

அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களின் வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியீடு காணும் எனக் கூறப்படுகிறது.

இதனால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெளியீடு தள்ளிப்போகலாம் என்றும் செய்திகள் வெளியாகிவுள்ளன.

தீபாவளிக்கு வெளியீடு காணும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘விடாமுயற்சி’ படத்தின் வெளியீடுத் தள்ளிப்போவதால், முன்பே பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட ‘குட் பேட் அக்லி’ படத்தை வெளியிட சாத்தியமில்லை. 

அப்படத்தை, அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி வெளியிடலாம் என்று தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்