ஆயுதபூஜையன்று ஜீவாவின் பிளாக் வெளியீடு

1 mins read
a7041fa6-70f9-40c0-bedb-935af576ce3c
‘பிளாக்’ படத்தில் ஜீவா - பிரியா பவானி. - படம்: ஊடகம்

ஜீவா - பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள திரைப்படம் ‘பிளாக்’. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். மேலும், விவேக் பிரசன்னா, யோக் ஜபீ, ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

ஒரு வீடு, இரண்டு கதாபாத்திரங்கள், அங்கு நடக்கும் சம்பவங்கள் என திகிலுடன் சுவாரஸ்யமாக படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இந்தப் படம் வெள்ளிக்கிழமையன்றும் வியாழனன்று ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படமும் திரைக்கு வர உள்ளன. இரண்டு படங்களும் ஆயுத பூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு வெளியிடப்பட உள்ளன.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்