தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெள்ளிக்கிழமை வெளியாகிறது ‘விடுதலை 2’

1 mins read
47bc2de4-24f1-437b-8421-52f1b3fc4c0f
‘விடுதலை 2’ படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர். - படம்: ஊடகம்

‘விடுதலை’ முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் நாளை வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது. இப்படத்தில் கூடுதலாக மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப், கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு வெளியான படங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படங்களில் ஒன்று வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’.

இப்படத்தில் சூரி கதையின் நாயகனாகவும் வாத்தியாராக விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். மேலும் கவுதம்மேனன், இளவரசு, ராஜீவ் மேனன், சேட்டன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘விடுதலை’ பாகம் இரண்டு இன்று வெளியாகிறது. இப்படத்தில் கூடுதலாக மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிறது என்றால், கண்டிப்பாக அது சமூகத்தில் உள்ள பிரச்சினையைப் பேசும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி.

முதல் பாகத்தில் சூரிக்கு அதிக காட்சிகளும், விஜய் சேதுபதிக்கு குறைவான காட்சிகளும் இடம் பெற்று இருக்கும். தற்போது இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு அதிக காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றன. அதேபோல் அண்மையில் இரண்டாம் பாகத்தில் வெளியான பாடல்களும் மக்களால் விரும்பிக் கேட்கப்படுகிறது.

இரண்டாம் பாகத்தில் அரசு, அரசாங்கங்கள், தேசிய இன விடுதலை உள்ளிட்ட வார்த்தைகளை தணிக்கைக்குழு மாற்றியிருக்கிறது. மேலும் வட்டார வழக்கு வார்த்தைகள் அனைத்தும் சத்தம் இல்லாமல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்