வருகிறது ‘சிக்மா’ பட ‘டீசர்’

1 mins read
b1709472-db7f-4851-997c-79cbc2aaa651
ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன். - படம்: X.com
multi-img1 of 2

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி வந்த ‘சிக்மா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, இப்படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்பு டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகிறது.

ஜேசன் சஞ்சயின் அறிமுகப் படமான ‘சிக்மா’வில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், சம்பத்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை அடுத்து வரும் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு டீசர் வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் மிக விரைவில் இறுதிக்கட்ட பணிகளும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்