தமிழ்த் திரையுலகில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பிறகு, அவர் கதாநாயகனாக இயக்கி, நடித்த ‘லவ் டுடே’ படம் வெளியானது. அப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது, ‘டிராகன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கயடு லோஹர், விஜே சித்து, ஹர்ஷத், இயக்குநர் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதற்கிடையே, இப்படத்தின் முதல் பாடலான ‘ரைஸ் ஆப் தி டிராகன்’ அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் 2வது பாடலான ‘வழித்துணையே’ ஜனவரி 13ஆம் தேதி மாலை வெளியானது.