சாலை விபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உயிரிழப்பு

சாலை விபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உயிரிழப்பு

2 mins read
02ed046d-3693-4038-9e85-425a2bc4a506
ஆர்.பி. சவுத்ரி - கோப்புப் படம்: ஈநாடு.நெட்

சென்னை: ராஜஸ்தானில் நிகழ்ந் சாலை விபத்தில் பிரபல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்​.பி.சவுத்ரி (72 வயது) மரணமடைந்​தார்.

சூப்​பர் குட் பிலிம்ஸ் என்ற தமது சொந்தப் படத் தயாரிப்பு நிறு​வனம் மூலம் ஏராளமான வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் ஆர்.பி.சௌத்ரி.

தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்​னடம், இந்​தி உள்ளிட்ட மொழிகளில் இவர் படங்களைத் தயாரித்ததுடன், பட விநியோகத்திலும் ஈடுபட்டிருந்தார்.

தமிழ்த் திரையுலகில் கடந்த, 1990களில் ஏராள​மான புதிய இயக்​குநர்​களை​யும் நடிகர், நடிகைகளை​யும் அறி​முகப்​படுத்​தி​ய பெருமை இவருக்கு உண்டு.

குறிப்பாக, இயக்குநர் விக்​ரமன் அறிமுகமான ‘புது​வசந்​தம்’, கே.எஸ்​.ரவி​கு​மார் அறி​முக​மான ‘புரியாத புதிர்’, சரத்​கு​மார் நடித்த ‘சேரன் பாண்​டியன்’, ‘நாட்டாமை’, ‘சூர்​ய வம்​சம்’, விஜய் நடித்த ‘பூவே உனக்​காக’, பாலசேகரன் அறிமுகமான ‘லவ் டுடே’ உள்பட பல வெற்றிப் படங்​களைத் தயாரித்துள்​ளார்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள தவெக தலைவர் விஜய்யின் திரைப் பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய படங்களில் ‘பூவே உனக்​காக’ குறிப்பிடத்தக்கது.

தனது ​நிறு​வனத்​தின் நூறாவது திரைப்​படத்தை விஜய் நடிப்​பில் தயாரிக்க இருப்பதாக ஆர்​.பி.சவுத்ரி அறி​வித்​திருந்​தார். ஆனால் அது சாத்தியமாகவில்லை.

தற்​போது, விஷால் இயக்​கி, நடிக்​கும் ‘மகுடம்’ சூப்​பர் குட் பிலிம்ஸின் 99வது திரைப்​படமாக உருவாகிறது.

தனது சொந்த ஊரான ராஜஸ்​தான் மாநிலம் உதய்ப்​பூருக்கு அவ்​வப்​போது சென்று வருவது ஆர்.பி.சவுத்ரியின் வழக்​கம்.

அண்மையில் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்கச் சென்றிருந்தார். அங்கு அவர் பயணம் செய்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஒரு பாலத்​தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்​திலேயே அவர் உயிர் பிரிந்தது. மறைந்த ஆர்​.பி.சவுத்​ரிக்கு சுரேஷ், ஜீவன், ஜித்தன் ரமேஷ், நடிகர் ஜீவா ஆகிய மகன்​கள் உள்​ளனர்.

அவரது மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்