திரைவிட்டு திரை தாவும் ரேஷ்மா

திரைவிட்டு திரை தாவும் ரேஷ்மா

1 mins read
5777bf04-a6b2-4e1a-866b-7f8f0ed88ea8
சின்னத்திரை நாயகி ரேஷ்மா முரளிதரன். - படம்: மாலை மலர்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு முன்னேறியுள்ளார் ரேஷ்மா முரளிதரன்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் ‘அபி டெய்லர்’, விஜய் தொலைக்காட்சியின் ‘கிழக்கு வாசல்’ உள்ளிட்ட சின்னத்திரைத் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரேஷ்மா.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘செல்லமே செல்லமே’ தொடரில் அவர் நாயகியாக நடித்து வருகிறார்.

அண்மையில் ஜீ தமிழின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ தொடரில் நாயகியாக நடித்திருந்தார். தனது இயல்பான நடிப்புத் திறனாலும் வசீகரமான தோற்றத்தாலும் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்து வரும் நடிகை அவர்.

மேலும், அவர் நடிக்கும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறுவதால், சமூக வலைத்தளங்களில் ரேஷ்மாவுக்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் உள்ளனர்.

அந்தப் புகழுடன் பெரிய திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார் ரேஷ்மா. காளி வெங்கட், ஜேசன் திவாகர், ஆடுகளம் நரேன், மைம் கோபி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடிக்கும் படத்தில் ரேஷ்மா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விஜய் கார்த்திகேயன் இப்படத்தை இயக்குகிறார்.

பெயரிடப்படாத இப்படத்திற்கான பூசை அண்மையில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரேஷ்மாவின் ரசிகர்கள் பகிர்ந்து, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்