பொறுப்புகள் அதிகரிக்கின்றன: சிவகார்த்திகேயன்

பொறுப்புகள் அதிகரிக்கின்றன: சிவகார்த்திகேயன்

1 mins read
79884a66-6da3-45d5-a4b4-764bcee61710
சிவகார்த்திகேயன். - படம்: முகநூல், சிவகார்த்திகேயன்

வாழ்க்கையில் போராட்டங்கள், சிக்கல்கள், தோல்விகள் இருந்தாலும் அவற்றை மீறி வெற்றிகளும் இருக்கும் என்கிறார் சிவகார்த்திகேயன்.

இவர் திரையுலகில் அறிமுகமாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்று அங்குள்ள முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் சிவா.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னைவிட ரசிகர்கள்தான் எனது வெற்றியைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

“ஒவ்வோர் ஆண்டும் கடந்து செல்லும்போது எனக்கான பொறுப்புகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. மேலும் பலவற்றை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மனத்தில் தோன்றுகிறது.

“வாழ்க்கை என்ற பயணத்தில் நிறைய தோல்விகளை, சிரமங்களை சந்திக்க நேரிடலாம். ஆனால், அவற்றை மீறி ரசிகர்கள் கொடுக்கும் அன்பை மட்டும்தான் பெரிதாக நினைக்கிறேன்.

“என்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். என்னிடம் இருந்து எந்த மாதிரியான படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்களோ அந்த மாதிரியான படமாக அது அமைந்திருக்கும்,” என்றார் சிவகார்த்திகேயன்.

குறிப்புச் சொற்கள்