தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இமயமலையில் உணவகம் தொடங்கினார் கங்கனா ரணாவத்

1 mins read
68565f66-a33c-495f-b126-96533584d250
கங்கனா ரணாவத் - படம்: ஊடகம்

நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத், தற்பொழுது தமிழில் மாதவனுடன் மர்மம் நிறைந்த ஒரு படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் விஜய் இயக்கும் இந்தப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாதம் 18ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், நடிகை கங்கனா ஓட்டல் தொழிலில் இறங்கியுள்ளார். இமயமலையில் ‘தி மவுன்டெய்ன் ஸ்டோரி’ என்ற உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார். வரும் 14ஆம் தேதி திறக்கப்பட உள்ள இந்த உணவகத்தில் உண்மையான இமாச்சலப் பிரதேச உணவு வகைகள் கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

புதிய உணவகத்தை அறிமுகப்படுத்தும் காணொளி ஒன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள கங்கனா, “இது உங்களுடனான எனது உறவின் கதை. அம்மாவின் சமையல் ஏக்கத்துக்கு இந்த உணவகம் ஒரு காணிக்கை. எனது சிறுவயது கனவு இப்போது நனவாகிறது,” என்று தெரிவித்துள்ளார்.

மணாலியில் இந்த உணவகம் தொடங்கப்படவுள்ளது. கங்கனாவுக்கு இணையவாசிகள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாஉணவகம்