கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘ரெட்ரோ’ படம் வருகிற மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது.
நடிகர் சூர்யாவின் 44வது படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படம் குண்டர் கும்பல் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாகக் கொண்டு உருவாகி உள்ளது.
இப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அண்மையில் சூர்யா 44 படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது. சண்டை கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ படம் தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.
தற்போது இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் டி சீரிஸ் பெற்றுள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சித்திரக்கதை வடிவில் வருகிற 14ஆம் தேதி வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.