ரெட்ரோ திரைப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.
அண்மையில் இப்படத்தின் முக்கியக் காட்சிகளை திரையிட்டுப் பார்த்த பட நாயகன் சூர்யாவும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினாராம். இத்தகவலையும் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
“அண்மையில் வெளியான இப்படத்தின் தலைப்பு தொடர்பான காணொளிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. மிக விரைவில் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகும்,” என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.
இப்படத்தில் சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டேவும் ஜெயராம், கருணாகரன், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.