பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் நாயகன் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.
‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கும் இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
டிசம்பர் 18ஆம் தேதி ‘ரெட்ட தல’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் முன்னோட்டக் காட்சி, திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் அபாரமான வரவேற்பைப் பெற்றது. தற்போது, படக்குழு அதிகாரபூர்வ வெளியீட்டுத் தேதியை அறிவித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளும் காதல் காட்சிகளும் கலந்த பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக சித்தி இட்னானி நடித்துள்ளார்.
இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெராடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

