ரியோ ராஜ் நாயகனாக நடித்து அண்மையில் வெளியான ‘ஆண் பாவம் பொல்லாதது’ படம் வசூல் ரீதியில் வெற்றி பெற்றதில், அவரும் ஒட்டுமொத்த படக்குழுவினரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
இந்நிலையில், சூட்டோடு சூடாக மூன்று புதுப் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் ரியோ ராஜ்.
அவற்றுள் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ராம் என்பவர் இயக்கும் படத்தில்தான் அடுத்து நடிக்க உள்ளாராம்.
இதையடுத்து, கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம், சிவகார்த்திகேயனின் எஸ்கே நிறுவனம் தயாரிக்கும் படங்களிலும் அடுத்தடுத்து நடிக்க உள்ளார் ரியோ ராஜ்.
இதுவரை ‘ஜோ’, ‘ஸ்வீட் ஹார்ட்’, ‘நிறம் மாறும் உலகில்’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்திருந்தார் ரியோ ராஜ். அவர் படங்கள் வசூல் ரீதியில் பெரிதாகச் சாதிக்கவில்லை என்ற குறையை ‘ஆண் பாவம் பொல்லாதது’ படம் தீர்த்து வைத்துள்ளது.

