சூர்யாவுடன் மோதும் ஆர்.ஜே.பாலாஜி

1 mins read
46591271-ab5c-4c17-8291-556203522045
ஆர்.ஜே.பாலாஜி, சூர்யா. - படம்: ஊடகம்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதில் அவருக்கு வழக்கறிஞர் கதாபாத்திரம்.

இந்நிலையில், சூர்யாவுடன் மோதும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.

இருவருக்கும் இடையே நடைபெறும் நீதிமன்ற விவாதக்காட்சிகளில் அனல் பறக்கும் எனப் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

தற்போது கோவையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

குறிப்புச் சொற்கள்