‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நாயகனாக நடித்திருக்கும் ‘ராபின்ஹுட்’

1 mins read
ccc0edc7-cad8-4b97-934b-52c8a0cd1742
‘ராபின்ஹுட்’  படத்தில் ராஜேந்திரன். - படம்: ஊடகம்

‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடித்திருக்கும் ‘ராபின்ஹுட்’ படத்தின் முன்னோட்டக்காட்சி வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘நான் கடவுள்’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராஜேந்திரன். பின்னர், வில்லன், நகைச்சுவை உள்பட பல்வேறு கதாபாத்திரங்களில் பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவருக்கு ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் என புனைப்பெயரும் உண்டு. இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இதனிடையே, அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், முதல் முறையாக நடிகர் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நாயகனாக நடித்துள்ள படம் ‘ராபின்ஹுட்’. இப்படத்தில் நடிகர்கள் மனோகர், சதீஷ், முல்லை உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1980களின் கிராமப்புற பின்னணியில் நகைச்சுவைக் கலந்த படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு அருப்புக்கோட்டை, காரியாபட்டி, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சியை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்