தனுஷ் மிகச் சிறந்த மனிதர் எனப் பாராட்டியுள்ளார் நடிகர் ‘ரோபோ’ சங்கர்.
அண்மைக்காலமாக தனுஷ் பல சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், ‘மற்றவர்களை மேடையேற்றிவிட்டு அழகு பார்க்கக்கூடிய ஏணியாக உள்ளார்,’ என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ‘ரோபோ’ சங்கர்.
“எனது சினிமா பயணத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த ‘மாரி’ படம் முக்கியமானது.
“என்னிடம் ஒரு குழந்தையைப் போல் பழகுவார். நடிகர் என்பதைக் கடந்து, சிறந்த மனிதராக மிகப் பெரிய உயரத்தில் இருக்கிறார். இன்றைய வாழ்க்கையில் தனுஷை மறக்கவே இயலாது,” என்று கூறியுள்ளார் ரோபோ சங்கர்.