அம்மா வேடத்தில் அசத்தும் ரோகிணி

1 mins read
1f12f51a-04fe-49b8-9c4f-bfe5db12ce5c
ரோகிணி. - படம்: ஊடகம்

கோலிவுட், டோலிவுட் எனப் பாரபட்சம் பார்க்காமல் அம்மா கதாபாத்திரங்களில் அதிகம் நடித்துவரும் ரோகிணி, அண்மையில் இதுகுறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

“தமிழில் ‘தண்டட்டி’ போன்ற, அம்மாவுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் அதிகம் நடித்துள்ளேன். நான் நடித்துள்ள அம்மா வேடம் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாக இருக்கும்.

“நடிக்கக் கேட்டு வரும் இயக்குநர்களிடம், ‘அம்மா என்றால் அவங்க யார்? கோபமானவரா, சிரமப்பட்டு முன்னேறியவரா, கர்வமாகப் பேசுபவரா, அவரால் கதையில் திருப்பம் ஏற்படுமா என என் சந்தேகங்களுக்கு எல்லாம் விடை தெரிந்த பின்னர்தான், அதில் நடிக்க ஒப்புக்கொள்வேன்,”’ என்கிறார் ரோகிணி.

குறிப்புச் சொற்கள்