விக்ரம் நடிப்பில் உருவாகும் அவரது 64வது படத்தை ‘96’ பட இயக்குநர் பிரேம்குமார் இயக்குவது உறுதியாகி உள்ளது. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல்.
ஏற்கெனவே, தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘ஏஸ்’ படத்தில் நடித்துள்ளார் ருக்மிணி. அடுத்து, சிவகார்த்திகேயனுடன் ‘மதராஸி’ படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படம் முடிவடைந்ததும், விக்ரம் படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். தொடர்ந்து, முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து வரும் ருக்மிணிக்கு, தெலுங்கிலும் இந்தியிலும்கூட நல்ல வாய்ப்புகள் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.
எனினும், ‘ஏஸ்’ படம் தோல்வி அடைந்ததால் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களிலாவது நடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ள அவர், கோடம்பாக்கத்தில் கிடைக்கும் வாய்ப்புகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகக் கூறப்படுகிறது.