தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூர்யாவுடன் இணையும் ருக்மிணி வசந்த்

1 mins read
9271bc98-937f-49df-98bb-7ea80858ad3e
ருக்மிணி வசந்த். - படம்: ஊடகம்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படத்தில் அவரது ஜோடியாக நடிக்க ருக்மிணி வசந்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, இப்படத்தில் பாலிவுட் நடிகை கஷ்மீரா பரதேசி நடிப்பார் எனத் தகவல் வெளியானது. எனினும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் ஒதுங்கிவிட்டதாகவும் அவருக்குப் பதிலாக ருக்மிணியுடன் படக்குழு பேசி வருவதாகவும் தெரிகிறது.

தற்போது சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ருக்மிணி.

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படம் வெளியீடு காணத் தயாராக உள்ளது. அடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் தனது 44வது படத்தில் நடித்து முடித்துள்ளாராம்.

இதையடுத்து ஏ.ஆர்.பாலாஜி இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்துக்கான படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்