ஹர்ஷ்வர்தனுடன் ஜோடி சேரும் ருக்மிணி வசந்த்

1 mins read
34421f28-88f8-4676-8a52-80f978eb5ecd
ருக்மிணி வசந்த். - படம்: ஊடகம்

இளம் நாயகி ருக்மிணி வசந்த் தன்னைவிட நான்கு வயது குறைவான அறிமுக நாயகனுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷ்வர்தன் நாயகனாக நடிக்க இருப்பதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்க உள்ளார்.

இப்படத்தின் நாயகி யார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது ‘மதராஸி’ படம் வெளியான நிலையில், அதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த ருக்மிணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக லிங்குசாமி தரப்பு கூறியுள்ளது.

படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர். மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகுமாம்.

குறிப்புச் சொற்கள்