கௌரவ முனைவர் பட்டம் பெற்ற மகிழ்ச்சி எஸ்.ஜே.சூர்யா முகத்தில் பிரகாசமாகத் தெரிகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
விரைவில் படம் இயக்க வேண்டும் என அவர் முடிவு எடுத்திருப்பதாகவும் அது தொடர்பான பணிகளை அவர் சத்தமின்றி தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடிப்பில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கிய நேரத்தில் ‘கில்லர்’ என்ற தலைப்பில் படம் இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா. பிறகு நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் தேடி வந்ததால் ‘கில்லர்’ பட அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், அந்தப் படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாகவும் இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா அறிவிக்க உள்ளதாகவும் கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

