மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘சர்தார்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
மீண்டும் மித்ரனும் கார்த்தியும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா (படம்) வில்லனாக நடிப்பது தெரிய வந்துள்ளது.
முதல் முறையாக சீன நாட்டு உளவாளி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் எஸ்.ஜே.சூர்யா.